300 கிமீ தூரத்திற்கு வரிசையாக நிற்கும் கார்கள்! உலகின் மிக பெரிய டிராபிக் நெரிசல்! திணறும் கும்பமேளா

பிரயாக்ராஜ், பிப்.10

இந்தியாவில் மகா கும்பமேளாவில் பங்கேற்கப் பக்தர்கள் திரண்டு வரும் சூழலில், அங்கு மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பல சாலைகளில் போக்குவரத்தை மொத்தமாக முடக்கிய போதிலும் அது குறையவில்லை. சுமார் 300 கிமீ தூரத்திற்கு நேரிசல் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இதை உலகின் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். 

ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது. அதன்படி நேற்று திடீரென மக்கள் மொத்தமாகத் திரண்ட நிலையில், பிரயாக்ராஜ் மட்டுமின்றி உபி எல்லை வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்து கொள்ள நேற்று ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் பேர் திரண்ட நிலையில், அங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில பாதைகளில் 300 கிலோமீட்டர்கள் வரை கூட வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன. உலகின் மிகப் பெரிய டிராபிக் நெரிசல்: இது தொடர்பான போட்டோக்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், இதை “உலகின் மிகப் பெரிய டிராபிக் நெரிசல்” என்று குறிப்பிடுகிறார்கள். 

 கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அண்டை மாவட்டங்களில் சாலைகளை மூடி போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் வரை சாலையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வெறும் 50 கிமீ தூரத்தைக் கடக்கவே 10 முதல் 12 மணி நேரம் வரை ஆவதாகவும் பல மணி நேரமாக ஒரே இடத்தில் சிக்கியிருப்பதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். என்ன தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தை நிறுத்தினாலும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம். 

WATCH OUR LATEST NEWS