பெட்டாலிங் ஜெயா, பிப்.10
2025 சின்சினாட்டி கெய்னர் கிண்ண இறுதிப் போட்டியில், மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி 11-7, 6-11, 7-11, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் இரண்டாவது நிலை வீராங்கனையான அமண்டா சோபியை வீழ்த்தி பரபரப்பான பாணியில் பருவத்தின் முதல் பட்டத்தை வென்றார்.
சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையும் நடப்புச் சாம்பியனுமான ஒலிவியா வீவரை வென்றதில் இருந்து சிவசங்கரி, ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் கன்ட்ரி கிளப்பில் 48 நிமிட டைட்டில் மோதலில் கிண்ணத்தை வெல்வதற்கான வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
சோபிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனக்கு அதிக அழுத்தம் கொடுக்காததுதான் பட்டத்தை வெல்வதற்கான திறவுகோல் என்று அவர் கூறினார்.
கடந்த ஏப்ரலில் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கில் கடைசியாக வெற்றியை ஈட்டிய சிவசங்கரி, இந்த ஆண்டின் முதல் பட்டத்தை வென்ற பிறகு உத்வேகமாக இருக்கிறார்.