சமய விழாக்களுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லை

கோலாலம்பூர், பிப்.12-

அரசாங்கத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் சமய விழாக்களுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்று ஒற்றுமை அமைச்சர் ஏரொன் அகோ டகாங் கூறினார். மாறாக, சமூக இடைவெளியைக் குறைக்கும் அதே வேளையில் கலாச்சார, பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அமைச்சு ஓர் அணுகுமுறையை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமை கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், முஸ்லிம்கள் மற்ற சமய விழாக்களில் நேரடியாக ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஸ் இளைஞர்கள் அணி முன்னதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS