புத்ராஜெயா, பிப்.12-
அதிகப்படியான செயல்பாடுகளைக் கையாள பல அரசு நிறுவனங்களை சீரமைப்பதற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு, அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதிக நட்டத்தை பதிவு செய்யும் நிறுவனங்கள் இருப்பதால், அரசு நிறுவனங்கள் உயர் மட்ட அனுமதியின்றி தங்களின் கீழ் நிறுவனங்களை உருவாக்க அனுமதிக்கப்படாது என்று அன்வார் கூறினார். நிறுவனங்களை இரத்து செய்வது எளிதானது அல்ல, ஆனால் அது செய்ய வேண்டிய ஒன்று என்றால், நாம் அதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.