முகமட் எக்வான் தொரிமானுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது

சிரம்பான், பிப்.12-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டிபெர்துவான் பெசார் துவான்கு முரிஸ் துவான்கு முனாவீர் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முகமட் எக்வான் தொரிமானுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை திரும்பப் பெற உத்தரவிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14, ஆம் தேதி வழங்கப்பட்ட DBNS எனப்படும் Darjah Setia Bakti Negeri Sembilan உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அரச நிறுவனத்தின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எக்வான் தனது பதவி விலகலை அறிவித்து, பல்கலைக்கழகத்திடம் மன்னிப்பு கோரினார். மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுக்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். உயர்கல்வி அமைச்சர் சம்ரி அப்துல் காதீர் எக்வானின் பதவி விலகல் கடிதத்தைப் பெற்றதை உறுதி செய்தார்.

WATCH OUR LATEST NEWS