சுங்கை பட்டாணி, பிப்.12-
நேற்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுங்கைப்பெட்டாணி ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து இன்று மாலை 7 மணிக்குத் தேர் ஊர்வலம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ “அரோகரா” கோஷங்கள் விண்ணை முட்ட, வண்ணமயமான அலங்காரங்களுடன் தேர் நகர்ந்து சென்றது. தைப்பூச நாயகன் முருகப் பெருமான் தேர் ஊர்வலம் சுங்கை பட்டாணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு அன்னதானமும் பானங்களும் வழங்கப்பட்டன. கோலாலம்பூர், பினாங்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சுங்கை பட்டாணிக்கு வந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். தேரோட்டம் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற ஆலய நிர்வாகத்தினரும் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட்டனர்.