சுவாராம் தலைவர் சிவன் துரைசாமி கைது

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

மனித உரிமை அமைப்பான சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து இருப்பதாக வழக்கறிஞர்களுக்கான மனித உரிமை அமைப்பான Lawyers For Liberty தெரிவித்துள்ளது.

சிவன் துரைசாமியைக் கைது செய்ததற்காக உள்துறை அமைச்சை சுவாராம் சாடியது. ஓர் அரசாங்க சார்பற்ற அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டதை மறுத்திருக்கும் உள்துறை அமைச்சை அந்த தன்னார்வ அமைப்பு கண்டித்துள்ளது.

சுவாராம் அலுவலகத்திற்கு வெளியே சிவன் துரைசாமி கைது செய்யப்பட்டதை, காணொளி ஒன்று தெளிவாகக் காட்டியுள்ளது என்று Lawyers For Liberty கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS