நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட் கோர விபத்தில் ஐவர் பலி

ஜெம்போல், பிப்.13-

நெகிரி செம்பிலான், ஜெம்போலில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 9.05 மணியளவில் ஜாலான் பஹாவ்-ரொம்பின் சாலையின் 6 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

Perodua Axia, Toyota Mark X மற்றும் Four Whill Drive வாகனம் ஆகியவை இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்தன. மூன்று பயணிகளுடன் ரொம்பினிலிருந்து பஹாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த 31 வயது ஆடவர் செலுத்திய Perodua Axia காரினால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹொக் தெரிவித்தார்.

இவ்விபத்தில் Perodua Axia காரில் அ மர்ந்திருந்த 18, 19 வயதுடைய இரு பயணிகள், Toyota Marx X வாகனத்தை செலுத்திய 51 வயது ஓட்டுநர் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Perodua Axia காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மேலும் இருவர் கடும் காயங்களுடன் குவாலா பிலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக ஹூ சாங் ஹொக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS