மலேசியா ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறத் தவறியது

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்பில் மலேசியாவின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பி குழுவுக்கான இரண்டாவது ஆட்டத்தில் லியோங் ஜுன் ஹாவ் தலைமையிலான மலேசிய அணி இந்தோனேசியாவிடம் 2க்கு 3 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது. 
 
இன்று சீனாவில் உள்ள கிங்டாவ் கான்சன் விளையாட்டு மையத்தில் நடந்த போட்டியில் கலப்பு இரட்டையர் ஜோடியான கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி கடுமையாகப் போராடி 21-17, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் டெஜான் ஃபெர்டினன்ஸ்யா-சிட்டி ஃபாடியா ராமதாந்தியிடம் 64 நிமிடங்களில் தோல்வியுற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோமாங் அயுவிடம் 12-21, 19-21 என்ற கணக்கில் கே.லெட்சனா வீழ்ந்தார். 
 
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 80 நிமிடங்களில் யோஹானஸ் சாட் மார்செலினோவை 11-21, 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜுன் ஹாவ், மலேசியாவுக்கு நம்பிக்கையை அளித்தார். மகளிர் இரட்டையர் ஜோடியான Teoh Mei Xing-Go Pei Kee ஆகியோர் 21-18, 7-21, 17-21 என்ற கணக்கில் Meilysa Trias-Rachel Allesya ஜோடியிடம் தோல்வியடைந்து காலிறுதிக்குத் தகுதி பெறும் மலேசியாவின் முயற்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 

 
கடைசியில் ஆடவர் இரட்டையர்களான மன் வெய் சோங்-டீ கை வூன் 65 நிமிடங்களில் 25-27, 21-17, 23-21 என்ற செட் கணக்கில் ஷோஹிபுல் ஃபிக்ரி-டேனியல் மார்ட்டின் ஜோடியை வீழ்த்தினர். 
 
தொடக்க ஆட்டத்தில் மலேசியா 2-3 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது. 

WATCH OUR LATEST NEWS