PKR தேர்தல்: உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வாரா Nik Nazmi?

சுபாங் ஜெயா, பிப்.13-

வரும் மே மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தமது பதவியைத் தற்காத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து PKR உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார். அதன் தொடர்பில் தற்போதைக்கு எதுவும் கூற இயலாது. பின்னர்தான் அறிவிப்பு வெளியிடப்படும் என இயற்கை வள, சுற்றுச் சூழல் அமைச்சருமான அவர் கூறினார்.

PKR கட்சியின் மத்தியச் செயலவை, மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுக்கான தேர்தல் மே 24 ஆம் தேதி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS