சுக்காய், பிப்.13-
மாந்திரீக சடங்கின் மூலம் உடலில் உள்ள பிணியை அகற்றுவதாக கூறி, 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போமோ ஒருவர், திரெங்கானு, சுக்காய் செஷன்ஸ் நிதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
Muhamad Adiq Alqbab Zainuddin என்ற 20 வயதுடைய அந்த போமோ, நீதிபதி வான் சுஹைலா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் சுக்காய், பண்டார் செரி பண்டி என்ற இடத்தில் அந்த இளம் போமோ இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.