பாசீர் கூடாங், பிப்.13-
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் அதிவேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இவ்விபத்து இன்று காலை 7.33 மணியளவில் ஜோகூர், செனாய் – டேசாரு நெடுஞ்சாலையின் 43.1 ஆவது கிலோமீட்டரில் பாசீர் கூடாங் அருகில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாசீர் கூடாங் மற்றும் ஜோகூர் ஜெயாவைச் சேர்ந்த 22 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
Proton Exora காருடன் மோதிய அந்த அதிவேக மோட்டார் சைக்கிள், 90 விழுக்காடு அழிந்தது. அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பாசீர் கூடாங் தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் ஹாய்ஃசுருல் ரஹ்மாட் தெரிவித்தார்.