Forklift இயந்திரம் கால்வாயில் விழுந்தது, ஓட்டுநர் பலி

குளுவாங், பிப்.14-

Forklift பாரந்தூக்கி இயந்திரம் ஒன்று கால்வாயில் குடை சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் ஜோகூர், குளுவாங், தாமான் பெர்லியான் பீரு என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மூன்று மீட்டர் ஆழத்தைக் கொண்ட அந்த கால்வாயில் கனரக இயத்திரத்துடன் விழுந்த 47 வயது Arifin Jujok என்ற அந்த கனரக ஓட்டுநர், இயந்திரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த ஓட்டுநர் உடல் , போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவ்விலாகாவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS