குளுவாங், பிப்.14-
Perodua Axia கார் ஒன்று, ஜோகூர், குளுவாங்கில் புலாதான் மாக்கோத்தா சாலை வட்டத்தை நூற்றுக்கு மேற்பட்ட முறை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வெள்ளை நிறக் கார், எதற்காக அந்த சாலை வட்டத்தை சுற்றி வலம் வந்து கொண்டிக்கிறது என்பதை நேரில் பார்த்தவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக 57 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் சம்பந்தப்பட்ட அந்த வாகனமோட்டியின் செயல் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த காரோட்டியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.