சொஸ்மா சட்டத்தில் மீளாய்வு: SUARAM வரவேற்பு

கோலாலம்பூர், பிப்.15-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் இணைக்கம் தெரிவித்து இருப்பதை மனித உரிமை அமைப்பான SUARAM இன்று வரவேற்றுள்ளது.

சொஸ்மாவை மீளாய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கும் அதேவேளையில் அந்த கொடுங்கோல் சட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திருத்தங்களை செய்வதில் அரசாங்கம், இனியும் தாமதம் காட்டக்கூடாது என்று SUARAM அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் சட்ட சீர்த்திருத்த துணை அமைச்சராக பொறுப்பேற்று இருந்த ராம் கார்ப்பால் சிங்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, அந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து துல்லியமாக பரிந்துரைக்கப்பட்டு, ஓர் ஆய்வறிக்கையாக உள்துறை அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டதையும் சிவன் துரைசாமி நினைவுகூர்ந்தார்.

WATCH OUR LATEST NEWS