பத்துமலை, பிப்.15
இவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் போது பெறப்பட்ட உண்டியல் காணிக்கைப் பணம், எண்ணப்படும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியவில் தொடங்கியது.
பத்துமலை தைப்பூச காணிக்கைப்பணம், முதல் முறையாக, பத்துமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவிலில் பொது மக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.
உண்டியல் காணிக்கைப் பணம் எண்ணப்படும் நடவடிக்கையில் பொது மக்களும், தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தெரிவித்துள்ளார்.