பத்து காஜா, பிப்.15-
பேரா, பத்து காஜாவில், பூட்டப்பட்ட குளியல் அறைக்குள் 44 வயது மாது இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று காலை 9.33 மணியளவில் நிகழ்ந்தது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோ அஹ்மாட் தெரிவித்தார்.
குளியல் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்ட தனது மனைவி வெளியே வரவில்லை என்று கூறி உதவிக்கோரி அந்த மாதுவின் கணவரிடமிருந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
குளியலறை கதவை உடைத்து, திறந்து பார்த்த போது அந்த மாது இறந்து விட்டது, மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக சபாரோட்ஸி தெரிவித்தார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக மாதுவின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.