கோழிப்பண்ணை தீயில் அழிந்தது 48 ஆயிரம் கோழிகள் மடிந்தன

ஜித்ரா, பிப்.15-

கெடா, ஜித்ரா, கம்போங் பாயா மூயுட்டில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் கோழிகள் மடிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் அந்த கோழிப்பண்ணையில் தீ நாலாபுறமும் கொழுந்து விட்டு எரிந்ததாக ஜித்ரா தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் புஸ்தான் காருடின் தெரிவித்தார்.

ஜித்ரா, புக்கிட் காயு ஹீத்தாம் மற்றும் ஆலோர் ஸ்டார் ஆகிய நிலையங்களிலிருந்து 26 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நள்ளிரவு 12.46 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மொத்த இழப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS