முஸ்லிம் அல்லாதவர்களுக்கான அமைச்சர் பதவி தேவையில்லை

கோலாலம்பூர், பிப்.15-

நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கு பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறையின் கீழ் அப்படியொரு இலாகாவைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. மாறாக, முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கும், அதனைக் கையாளுவதற்கும், அது தொடர்பான பிரச்னையைக் கொண்டு வருவதற்கும் தமது தலைமையிலான ஒற்றுமைத்துறை அமைச்சு உள்ளது என்று அரோன் அகோ டகாங் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS