கோலாலம்பூர், பிப்.15-
நடைபெறவிருக்கும் PKR கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தாம் தலையிடப் போவதில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
குறிப்பாக , PKR கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரண்டு முக்கியப் பொறுப்புகளுக்கான தேர்தலில் தமது தலையீடு இருக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அதேவேளையில் அவ்விரு முக்கியப் பதவிகளுக்கும் போட்டியிருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது கட்சியின் உயர் மட்டம் முடிவு செய்யும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.
PKR கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் கட்சி உயர்மட்டப் பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் குறிப்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் தமது தலையீடு அறவே இருக்காது என்று பிரதமர் உறுதி அளித்தார்.