கோலாலம்பூர், பிப்.15-
மலேசியன் லீக்கின் (எம் லீக்) தரத்தை மேம்படுத்துவது மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்ஏஎம்) முக்கிய நோக்கமாகும். புதிய தலைவர் டத்தோ முகமட் ஜோஹரி முகமட் அயூப் அவ்வாறு கூறியிருக்கிறார். எம் லீக் போட்டியாளர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக சம்பள நிலுவை பிரச்சினை, மிக அதிகமான ஆதரவாளர்கள் மைதானத்திற்கு வருகை போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, உள்ளூர் கால்பந்து அரங்கை சிறந்த நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் மலேசிய கால்பந்து லீக்குடன் (MFL) இணைந்து செயல்படுவேன் என்று முகமட் ஜோஹரி விளக்கினார்.
எஃப்ஏஎம் தேர்தலில் இரண்டு துணைத் தலைவர்களான டத்தோ முகமட் யூசோஃப் மஹாடி மற்றும் டத்தோ எஸ் சிவசுந்தரம் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். உதவித் தலைவர்களாக என்.சாரன் உட்பட நால்வர் தேர்வாகினர். ஆட்சிக் குழு உறுப்பினர்களாக எண்மர் வெற்றி பெற்றனர். அவர்களில் டத்தோ டாக்டர் பிஎஸ் சுகுமாறனும் ஒருவர்.