சிறார்கள் பாலியல் துன்புறுத்தல், 16,328 புகார்கள்

ஈப்போ, பிப்.15-

சிறார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தொடர்பில் கடந்த ஆண்டு நாட்டில் 16 ஆயிரத்து 328 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக Childline அறவாரியத்தின் இயக்குநர் டத்தின் வொங் போய் ஹோங் தெரிவித்தார்.

Watch Foundation Malaysia இணைய தரவு தளத்திலிருந்து கிடைக்கப் பெற்ற இந்த புள்ளி விவரங்களின்படி 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப் பெற்ற மொத்த எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 902 புகார்கள், உரிய நடவடிக்கைக்காக சட்ட அமலாக்கத் தரப்பினரின் கவனதிற்கு கொண்டு செல்லப்பட்டதாக டத்தின் வோங் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS