சண்டாகான், பிப்.16-
சந்தேகிக்கப்பட்ட ‘ham & cheese’ sandwicகளில் பன்றியின் மரபணு இல்லை என்று வேதியியல் துறை உறுதிச் செய்துள்ளது. ஹலால் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட கடைகள் மூடப்பட்டன, மேலும் தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனக் கூறினார் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி.
விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டது என்றும், அதிகாரப்பூர்வமான தரப்பினரிடம் இது பரிந்துரைக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹலால் சின்னத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.