P-hailing Rahmah திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், பிப்.16-

P-hailing Rahmah திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் மேம்படுத்தப்படும் என்று தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, டெலிவரி ஊழியர்களுக்கு மலிவான இணையச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள், P-hailing நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஓய்வெடுக்கும் இடங்கள், தொழுகை வசதிகள் ஆகியன ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தொற்றுக் காலங்களில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்பட்ட டெலிவரி ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS