அரசியல் சூழ்ச்சி அல்ல

பெட்டாலிங் ஜெயா, பிப்.16-

பொதுத் தேர்தல் திடீரென நடக்க வாய்ப்புள்ளதால், தங்கள் கட்சி இயந்திரத்தைத் தயார் நிலையில் வைக்குமாறு கூறியது அரசியல் சூழ்ச்சி அல்ல என்று பெர்சத்து கட்சி மறுத்துள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினோம் என்றும், இதில் எந்த அரசியல் சூழ்ச்சியும் இல்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். சபா மாநிலத் தேர்தலிலும் எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS