ஜோகூர் பாரு, பிப்.16-
PKR தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வெளிப்படைத்தன்மை மே மாதம் வரவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில், கட்சித் தலைவர் , துணைத் தலைவர் பதவிகள் போட்டியிடப்படுவதைத் தடுக்காது. இது ஜனநாயக நடவடிக்கை என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அப்துல் காரிம் தெரிவித்தார். அன்வாரின் இந்த வெளிப்படைத்தன்மை கட்சியில் ஜனநாயக நடைமுறையை வளர்க்கிறது என்றும், இதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டத் தலைமையை தீர்மானிக்க வாய்ப்பு வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், PKR ஒரு ஜனநாயகக் கட்சி என்றும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இது இளைஞர்களுக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் என்றும், இதன் மூலம் அவர்கள் கட்சியில் ஆர்வம் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நடைமுறை இந்தத் தேர்தலில் மட்டுமல்லாமல் வரும் ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களிலும் தொடரப்படும் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்தார். கட்சித் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், ஆனால் தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு எதிராக போட்டியிட யாரும் இல்லை என்றால், அதுவே அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை என்றும் அவர் கூறினார்.