சட்டவிரோதக் குடியேறிகள் நாட்டிற்குள் நுழைய முயற்சி, பாகிஸ்தான் ஆடவர் கைது

பாசீர் மாஸ், பிப்.17-

சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டிற்குள் கொண்டு வருவதில் போக்குவரத்து சேவையை வழங்கிய பாகிஸ்தான் ஆடவரை கலாட் படை போலீசார் கைது செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, கிளந்தான், பாசீர் மாஸ், செரோங்கா என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை, போலீசார் மடக்கி சோதனையிட்ட போது, காருக்குள் நான்கு அந்நிய நாட்டவர்கள் இருப்பது தெரியவந்தது.

போக்குவரத்துச் சேவையை வழங்கிய 40 வயது பாகிஸ்தான் ஆடவர் கைது செய்யப்பட்ட வேளையில் காருக்குள் இருந்த நான்கு அந்நிய நாட்டவர்கள், தங்களின் பயண ஆவணங்களை காட்டத் தவறினர். இதனைத் தொடர்ந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த அனைவரும் கைது செய்யப்பட்டதாக கலாட் படையின் மத்திய பிராந்தியத்திற்கான உயர் அதிகாரி காமாண்டர் பிரிகேட், டத்தோ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS