2025 – 2026 புதிய கல்வியாண்டு தொடங்கியது. கெடா, திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் புதிய கல்வியாண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதர மாநிலங்களில் புதிய கல்வியாண்டு இன்று திங்கட்கிழமை தொடங்கியது.
கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் காலெடுத்து வைத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கெடா மாநிலத்தில் ஒட்டுமொத்த நிலையில் 752 பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 966 மாணவர்கள் கல்விப் பயிலத் தொடங்கியுள்ளதாக மாநில கல்வி இலாகா இயக்குநர் இஸ்மாயில் ஓத்மான் அறிவித்துள்ளார்.