பெட்டாலிங் ஜெயா, பிப்.17-
இனத்துவேஷத்தை ஏற்படுத்தியுள்ள அந்த சோள வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர மன்னிப்பு போதாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சால்லே கேட்டுக்கொண்டார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை சீர்குலைக்கவும், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் முனையும் எந்தவொரு தரப்பினர் அல்லது தனிநபர் மீது சட்டம் பாய வேண்டும் என்று டாக்டர் அக்மால் வலியுறுத்தினார்.
வெறும் மன்னிப்பு மட்டும் ஒருவரின் செயலுக்கு தீர்வாகாது. இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், மற்றவர்களுக்கு ஒரு பாடாமாக அமைவதற்கும் அந்த சோள வியாபாரி மீது அமலாக்கத் தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இனத்துவேசத் தீயை மூட்டிவிடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வதற்கு அந்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும் என்று டாக்டர் அக்மால் வலியுறுத்தியுள்ளார்.