இனத் துவேஷத்தைத் தடுக்க புதிய சட்டங்கள் தேவையில்லை

கோலாலம்பூர், பிப்.18-

நாட்டில் இன வெறி அல்லது இனத் துவேஷத்தைத் தடுப்பதற்கும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் பிரத்தியேகமாக புதிய சட்டம் எதுவும் இயற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

இனத்துவேஷப் பிரச்னையைத் தடுப்பதற்கும், அதனைத் கையாளுவதற்கும் தற்போது நடப்பில் உள்ள சட்டங்களே போதுமானதாகும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இனத்துவேஷச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், கையாளுவதற்கும் நடப்பில் உள்ள 10 சட்டங்களை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் மேற்கோள்காட்டினார்.

அவற்றில் சட்டப்பிரிவு 295,296, 298, 298 A, 504, 505 மற்றும் 506 ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

இதில் 1984 ஆம் ஆண்டு அச்சு மற்றும் வெளியீட்டுச் சட்டப்பிரிவு 8A ஒன்று, 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் , 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் ஆகியவை, இன துவேஷத்தைத் தடுப்பதற்கும், கையாளுவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்களாகும் என்று அமைச்சு சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS