சந்தேகப் பேர்வழி, அதிரடித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, பிப்.18-

கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, ஷா ஆலம், செத்தியா சிட்டி மால் பேரங்காடியில் துப்புரவு பணியாளரை துப்பாக்கியினால் சுட்டுக் காயப்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழி, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிள்ளான், பூலாவ் கெதாமில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த அதிரடித் தாக்குதலில் அந்த சந்தேகப் பேர்வழி சுட்டுக்கொல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த சந்தேகப் பேர்வழி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் போலீசார் நுழைந்த போது, அந்நபர் போலீசாரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டார். அப்போது போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்தியதில் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

பூலாவ் கெத்தாமில், ஹோட்டல் அறையில் கடந்த இரண்டு தினங்களான அந்நபர் பதுங்கியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் புக்கிட் அமான் போலீசாரும், சிலாங்கூர் போலீசாரும் களம் இறங்கியதாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல், வழிபறி கொள்ளை என அந்த நபர் ஒன்பது குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ ஹுசேன் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS