கோமேஸ் காயப் பிரச்னைக்கு ஆளாகியுள்ளார்

லிவர்புல், பிப்.18-

பிரீமியர் லீக்கில் தற்போது முன்னணியில் இருக்கும் லிவர்பூல் விளையாட்டாளர் காயப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது. தொடை காயம் காரணமாக பல வாரங்களுக்கு டிஃபென்டர் ஜோ கோமேஸ் சேவையை அது இழக்கலாம். 

நாளை இங்கிலிஷ் பிரீமியர் லீக் ஆக்ஷனுக்காக ஆஸ்டன் வில்லாவுக்குச் செல்லும் ஆர்னே ஸ்லாட்டின் அணிக்கு இது பெரும் அடியாகும். 

அதே காயத்துடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அந்த இங்கிலாந்து அனைத்துலக வீரர் வீரர் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இந்த மாதம் எஃப்ஏ கோப்பையில் பிளைமவுத் ஆர்கைலில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அவர் அவ்வாட்டத்தில் 11 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.  
 
“ஜோ மீண்டும் களமிறங்க நேரம் எடுக்கும். தொடை காயம் காரணமாக அவர் சில வாரங்களுக்கு வெளியே இருப்பார்” என்று ஸ்லாட் கூறினார். 2015 முதல் லிவர்பூல் வீரராக இருந்து கரும் கோமேஸுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், சீசனின் பெரும்பாலான போட்டிகளை அவர் தவறவிடுவார். 

WATCH OUR LATEST NEWS