பட்டர்வொர்த், பிப்.20-
பட்டர்வொர்த், பாகான் ஆஜாம், பந்தாய் பெர்சே, மேடான் செலேரா உணவகத்திற்கு பின்புறம் நேற்று கைத்துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர் என்று செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் போலீசார், புலன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட அந்த துப்பாக்கி, துருப்பிடித்த நிலையிலும், செயலிழந்தும் காணப்பட்டதாக அவர் மேலும் விளக்கினார்.