மலேசியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது

கோலாலம்பூர், பிப்.20-

மலேசியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் கடந்த 15 ஆண்டு காலமாக குறைந்து வருகிறது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார, சமூகவியல் ஆணையம், மக்கள் தொகை தொடர்பில் 2024 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி பெரும்பாலான ஆசிய பசிபிக் நாடுகளின் மொத்த கருவுறுதல் விகிதமான TFR, 2.1 க்கும் கீழே உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலை இருந்து வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் நான்சி சுக்ரி இதனைத் தெரிவித்தார்.

எனினும் நாட்டில் கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 ஆக பதிவாகியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS