நீலாய், பிப்.21-
நீலாய், நீலாய் 3 இல் செயல்பட்டு வந்த கார்பேட் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று, இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக அழிந்தது.
இந்த கார்பேட் தொழிற்சாலை, சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக அழிந்த நிலையில், தற்போது நீலாய் 3 க்கு மாறி வந்து, புதிதாகச் செயல்படத் தொடங்கிய நிலையில், முன்பு ஏற்பட்ட அதே கதி, தற்போதும் ஏற்பட்டிருப்பது, அதன் நிர்வாகத்தை பெரும் கவலையில் ஆழ்த்தியது.
இந்த தீ விபத்து குறித்து காலை 7.49 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக நெகிரி செம்பிலான் செயலாக்க நடவடிக்கை மையம் தெரிவித்தது.
நீலாய், மந்தின், சிரம்பான் 2 ஆகிய மூன்று தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 28 வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக அந்த மையம் கூறியது.