இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா பானு இருவரும் 29 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்தாண்டு நவம்பரில் விவாகரத்தை அறிவித்தனர். இந்த அறிவிப்பு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சில தவறான தகவல்களும் அதன்பின் வர தொடங்கியது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என சாயிரா பானுவே விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் சாயிரா பானு தற்போது மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை திடீரென மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது.
இது பற்றி தனது வழக்கறிஞர் மூலமாக சாயிரா பானு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் தனக்கு உதவிய ரசூல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி கூறியுள்ளார் அவர்.