மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி…

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது. ஆனால், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவானது. இதில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் டிராகன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஒரு அதிரடி அப்டேட் கொடுத்துள்ளார். அதில், ” ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் நான் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்த மூன்று வருடத்தில் ஒரு படம் வரும். அதாவது இந்த காம்போ மீண்டும் இணைவோம். ஆனால், அப்போது என் நண்பனுக்கான படமாக அது இருக்காது. பிரதீப் என்ற ஒரு ஸ்டாருக்கான படமாக அது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.  

WATCH OUR LATEST NEWS