டிஏபி தலைவர் பதவிலிருந்து லிம் குவான் எங்கை அகற்றத் திட்டமா? ஆருடங்களை நிராகரித்தார் திரேசா கொக்

கோலாலம்பூர், பிப்.22-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டிஏபியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சியின் தலைவர் பதவிலிருந்து லிம் குவான் எங் அகற்றப்படலாம் என்று கூறப்படும் ஆருடங்களை கட்சியின் உதவித் தலைவர் திரேசா கொக் நிராகரித்துள்ளார்.

அதே வேளையில் லிம் குவான் எங் தலைமை குறித்து முடிவு செய்வது பேராளர்களின் பெறுப்பாகும் என்று செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரான திரேசா கொக் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் தலைமை, கட்சிக்கு இன்னமும் தேவைப்படுவதாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் நெடும் பயணத்தில் லிம் குவான் கொண்டுள்ள பரந்த அனுபவம் மூலம் அவரின் பங்களிப்பு கட்சிக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது.

கட்சித் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இது போன்ற யூகத்தையும் , வதந்தியையும் எழுப்புகின்றனர். இது வழக்கமான ஒன்று என்றாலும் அந்த வதந்திகளைத் தாம் நிராரிப்பதாக திரெசா கொக் தெரிவித்தார்.

கட்சியின் தலைமை பதவியிலிருந்து லிம் குவான் எங்கை அகற்றுவதற்கு ஒரு தரப்பு, முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் திரேசா கொக் எதிர்வினையாற்றியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS