கோலாலம்பூர், பிப்.22-
நடப்பு வெற்றியாளரான JDTக்கும் Sri Pahang FCக்கும் இடையிலான மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி புகிட் காலில் தேசிய அரங்கில் நடைபெறும். மலேசிய கால்பந்து லீக் ஓர் அறிக்கை வழி அதனைத் தெரிவித்துள்ளது.
மலேசிய லீக் ஆட்ட அட்டவணை, ஆசிய எலிட் வெற்றியாளர் லீக்கில் JDTயின் பங்கேற்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டதாக MFL விளக்கியது. அதே சமயம் புகிட் காலில் தேசிய அரங்கத்தின் தயார் நிலையும் கருத்து கொள்ளப்பட்டதாக அது கூறியது. இரு அணிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கன ரசிகர்கள் அரங்கில் திரள்வர். அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிக்க அந்த அரங்கமே சிறந்தது என்பதையும் MFL குறிப்பிட்டது.
மலேசியக் கிண்ண இறுதியாட்டம் முடிவடைந்ததும் தரமுயர்த்தும் பணிகளுக்காக புகிட் ஜாலில் அரங்கம் மூடப்படும். எனவே இறுதியாட்டத்தை நடத்த ஏப்ரல் 12 ஆம் தேதியே சிறந்த தினம் என அது தெளிவுபடுத்தியது.