பாங்கி, பிப்.22-
எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானிய ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் அரசாங்கம் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முன்வைக்காமல், மானிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மானிய ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னரே பிரதமரை ஆதரிக்கும்படி தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
ஆனால், எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாமலேயே பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை தவிர்க்க இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.