ஈப்போ, பிப்.22-
பேரா, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானார். இன்று மாலை 6 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், மாநகர் மன்ற திடலில் நட்புறவு கால்பந்தாட்டத்தில் பங்கேற்ற இஷாம் ஷாருடின் மயங்கி கீழே விழுந்தார்.
59 வயதுடைய இஷாம் ஷாருடினுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தேசிய மற்றும் பேரா மாநில கால்பந்தாட்ட வீரரான இஷாம் ஷாருடின் , முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களுடன் நட்புறவு ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தாப்பா அம்னோ தொகுதி தலைவரான இஷாம் ஷாருடின், அந்த தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.