ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினரின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

ஈப்போ, 23-

பேரா, ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடினின் நல்லுடல் இன்று காலை ராபாட் செத்தியா இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்நல்லடக்கச் சடங்கில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி முகமட், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பெருவாரியானோர் அதில் பங்கேற்றனர்.

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நட்புமுறை கால்பந்தாட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த போது இஷ்சாம் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை 5.40 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பின்னர் உறுதிச் செய்யப்பட்டது.

WATCH OUR LATEST NEWS