சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த தளபதி விஜய்.. இயக்குநர் சொன்ன தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தவறிவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் சண்டைக்கோழி. இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க, விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்த சண்டைக்கோழி திரைப்படத்தை ஏன் விஜய் வேண்டாம் என கூறினார் என இயக்குநர் லிங்குசாமி அண்மைய பேட்டியில் கூறியிருந்தார். இதில் “சண்டக்கோழி ஸ்கிரிப்ட் முடிந்ததும் விஜய் சார் கிட்ட சொல்ல போனேன். முதல் பாதி கதையை கேட்டதும் போதும்னு நிறுத்திட்டார். முழுசா கேட்ருங்கண்ணா என கூறினேன். ராஜ்கிரண் மாதிரி ஒருத்தரி இப்படத்தில் இருக்கும் போது எனக்கு இதுல என்னண்ணா இருக்குன்னு சொல்லிட்டார். அடுத்து சூர்யாகிட்ட போனேன். அதுவும் நடக்கல. நம்மகிட்ட ஒருத்தன் இருக்கும்போது ஏன் வெளியில தேடணும்னு அதை விஷாலுக்கு பண்ணினேன்” என கூறினார். 

WATCH OUR LATEST NEWS