ஜோகூர் பாரு, பிப்.23-
ஜோகூர், கெம்பாஸ் அருகே செத்தியா டுரோப்பிக்காவில் 5.6 ஆவது கிலோமீட்டரில் விபத்தில் சிக்கிய காரோட்டி தீயில் கருகி மாண்டார். அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.58 மணியளவில் தங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த நடவடிக்கை கமாண்டர் தௌஃவிக் அதான் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, மீட்பு குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். சம்பவத் தளத்தில் Honda City காரொன்று சுமார் 90 விழுக்காடு தீக்கிரையாகிக் கிடந்தது. அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.