கோலாலம்பூர், பிப்.23-
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் மாநில அரச குடும்பத்தின் படங்களை அனுமதியின்றி பயன்படுத்தி சமூக ஊடகத்தில் போலி கணக்கொன்று இருப்பதாக ஜோகூர் அரச குடும்பத்தின் ஊடக, தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தகவல் இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
எனவே அத்தகைய போலிக் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. மோசடி நடவடிக்கைகளுக்காக சில பொறுப்பற்ற தரப்பினர் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதும் அத்தகவலில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இதற்கு முன் Instagramமில் பேரரசியார் Raja Zarith Sofiahவின் அடையாளத்தைப் பயன்படுத்தி போலி கணக்கு இருந்தது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.