மதிக முன்னாள் தேசியத்தலைவர் ப.காந்தராஜு காலமானார்

கோலாலம்பூர், பிப்.24-

மதிக முன்னாள் தேசியத்தலைவர் ப.காந்தராஜு மறைவுக்கு எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

ப.காந்தராசு, நேற்று காலமானார். அன்னாரின் மறைவையொட்டி- மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு. ஆ.தமிழ்மணி அன்னாருக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினார்.

சிந்தனைப் பேரவையின் துணைத்தலைவராக இருந்து பணியாற்றி வந்த காந்தராஜு மறைவு, இயக்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தமிழ்மணி குறிப்பிட்டார்.

மலேசியத் திராவிடக்கழகத்தில் ஜாசின் கிளைத்தலைவராகவும்- மலாக்கா மாநிலத் தலைவராகப் பணியாற்றி வந்த அன்னார் பின்னர், அவ்வியக்கத்தின் தேசியத்தலைவராகவும் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்துள்ளார்.

50- ஆண்டுகாலம், அரசியல் சமூகப்பணியாளராக நீடித்து வந்துள்ள அன்னார் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று இயக்கத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS