18 ஊடக நிறுவனங்களின் டிக் டாக் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர், பிப்.24-

பலதரப்பட்ட ஊடக நிறுவனங்களின் 18 TIK TOK கணக்குகளை தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நிரந்தரமாக முடக்கியுள்ளது.

அண்மையில் சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் ஆடவர் ஒருவர், சிறுமியொருவரை தூக்கிச் சென்று மானபங்கம் செய்யும் காட்சி தொடர்பான காணொளி தொடர்பில் அந்த ஊடகங்களின் டிக் டாக் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

அந்த காணொளியில், AI தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட காட்சியை , அந்த ஊடகங்கள் உபயோகித்ததன் காரணமாக அவற்றின் டிக் டாக் கணக்குகள் MCMC- யினால் முடக்கப்பட்டுள்ளதாக ஃபாமி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS