ஈபிஎப் சந்தாதாரர்களுக்கான லாப ஈவு, 6.3 விழுக்காடு வரை வழங்கப்படலாம்

பெட்டாலிங் ஜெயா, பிப்.24-

தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஎப், தனது சந்தாதாரர்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான லாப ஈவாக 6 முதல் 6.3 விழுக்காடு வரை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று ஷரியா சேமிப்பாளர்களுக்கு லாப ஈவு, 5.4 முதல் 5.6 விழுக்காடு வரை இருக்கும்.

நாட்டின் பொருளாதார செயல்திறன், 2024 ஆம் ஆண்டு முழுவதும் ஈபிஎப் முதலீடுகள் பெருக்கம் நேர்மறையான அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு வலுவான லாப ஈவை, தனது சந்தாதாரர்களுக்கு ஈபிஎப் இம்முறை வழங்கலாம் என்று முன்னணி பொருளாதார ஆய்வாளர் டாக்டர் முகமட் அப்சாநிஸாம் அப்துல் ரஷிட் கூறுகிறார்.

GDP எனப்படும் உள்நாட்டு உற்பத்தி திறன், கடந்த 2023 ஆம் ஆண்டு 3.6 விழுக்காட்டிலிருந்து 5.1 விழுக்காடாக வளர்ச்சியைப் பதிவு செய்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

உள்நாட்டு தேவை, முதலீடு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான மீட்சி ஆகியவையே ஈபிஎப் செயல்திறன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் என்று Bank Mualamad Malaysia Berhad- டின் பொருளாதார ஆலோசகரான அப்துல் ரஷிட் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS