டிஏபியில் அணி என்ற பிணி இல்லை – அந்தோணி லோக் திட்டவட்டம்

சிரம்பான், பிப்.24-

டிஏபியில் அணி என்ற பிணி இல்லை. அனைவருமே ஒரே அணி என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மீணடும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டிஏபியின் உயர்மட்டப் பதவிகளுக்கான மத்திய செயலவைத் தேர்தலில் களம் காண்கின்ற அனைவருமே டிஏபி என்ற ஒரே அணியே தவிர பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய மாற்று அணிகள் கிடையாது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

டிஏபியின் தேர்தல் நடைபெறும் ஒவ்வெரு முறையும் அணி என்ற போர்வையில் பிணி என்ற சொல்லாடல் கட்சியில் ஒட்டிக்கொண்டு, அது குறித்து மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் ஒரே களத்தில் நின்று, ஒரே இலக்கை நோக்கி அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

டிஏபியின் எதிர்ப்பாளர்களே, இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS