கோலாலம்பூர், பிப்.24-
தேசிய பௌலிங் வீரர் முகமட் ஹபீஸ் ஜைனுதீன் 11வது துபாய் அனைத்துலக பௌலிங் போட்டியில் வென்றதன் மூலம் தனது முதல் அனைத்துலக பட்டத்தை வென்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அல் மம்சாரில் உள்ள துபாய் அனைத்துலக பௌலிங் மையத்தில் நடந்த போட்டியில், 25 வயதான அவர் எட்டு ஆட்டங்களில் மொத்தம் 1,744 பின்களை வீழ்த்தினார்.
பஹ்ரைன் வீரர் அஹ்மத் அல் மஹ்ரி 1,731 பின்களை வீழ்த்தீ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். துபாய் வீரர் ஹசன் அல் ஜாபி (1,729) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மற்றொரு தேசிய பிரதிநிதியான முஹம்மது சயாசிரோல் ஷம்சுதின் 1,722 பின்களை வீழ்த்தி போட்டியை ஐந்தாவது இடத்தில் முடித்தார். வெற்றியாளரான, முஹம்மது ஹபீஸ் 59,859 மலேசிய ரிங்கிட்டை ரொக்கப் பரிசாக வென்றார்.